2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

விடியலுக்காக காத்திருக்கும் ஹன்சி!

George   / 2014 டிசெம்பர் 17 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது வசீகரத்தால் இளைய உள்ளங்களை கொள்ளை கொண்ட ஹன்சிகா 2015ஆம் ஆண்டின் முதல் விடியலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.  'அரண்மனை' திரைப்படத்தின் மாபெரும் வெற்றி தந்த தன்னைம்பிக்கையுடன் அவர் கூறியதாவது,
 
'அரண்மனை' திரை உலகில் எனக்கு ஒரு விசாலமான இடத்தை தந்துள்ளது. என்னுடைய திறமை மேல் நம்பிக்கைக் கொண்டு அந்த பிரமாதமான கதாபாத்திரத்தை இயக்குநர் சுந்தர்.சி எனக்கு வழங்கியமைக்கு நான் கொடுத்து வைத்து இருக்க  வேண்டும்.
 
பொங்கல் அன்று வெளிவரும் ஆம்பள திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து உள்ளேன். நட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள இந்த படம் ஏற்ற படமாக இருக்கும். 
 
டிசெம்பரில் வெளிவர இருக்கும் மீகாமன் திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இந்த திரைப்படம்படம் ஹொலிவூட் திரைப்படங்களுக்கு இணையான படமாக இருக்கும். அடுத்து வெளிவரும் உயிரே படத்தில் என்னுடைய வயதுக்கு உகந்த கதாபாத்திரத்தில நடித்து உள்ளேன். 
 
அடுத்து நான் மிகவும் எதிர்பார்க்கும் வாலு எனக்கு மிக பொருத்தமான திரைப்படமாகும். மிகவும் துடிப்பான வலிமையான பாத்திரம்.  இதற்கெல்லாம் மேலே விஜயுடன், சிம்பு தேவன் இயக்கத்தில் நடிக்கும் பிரம்மாண்டமான படைப்பு. இந்த படத்தில் நான் இளவரசியாக நடிக்கிறேன். படப்பிடிப்பில் நான் இளவரசியாக தான் உணர்கிறேன். 
 
சிலர் எனக்கு அதிர்ஷ்டம் என்கின்றனர். கடின உழைப்புடன் விடாமுயற்சி இருந்தால் வெற்றி கிட்டும். என்ன நடந்தாலும், நான் என் கடமையில் கண்ணாக இருப்பேன் என்கிறார் அம்சமான பொண்ணு ஹன்சிகா.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .