2025 மே 19, திங்கட்கிழமை

தலயின் 3 முகங்கள்...

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

]
கௌதம் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் அஜீத்தின் 55ஆவது திரைப்படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக தலைப்பு அறிவிக்கப்படவில்லை. இதில், அஜீத்தின் ஜோடியாக அனுஷ்கா மற்றும் த்ரிஷா என இரண்டு நாயகிகள்.

இது தவிர விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தில் வரும் சில வசனங்களுக்கு உலக நாயகன் கமல் ஹாஸன் பின்னணி குரல் கொடுக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் அஜித் மூன்று வித கதாபாத்திரங்களில் தோன்றுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இத்திரைப்படத்தில் அஜீத்தின் மனைவியாக த்ரிஷா நடிக்கிறார். ஐந்து சுந்தரிகள் என்ற மலையாள திரைபடத்தில் நடித்ததற்காக மாநில விருது பெற்ற அனிகா, அஜீத்துக்கு மகளாக நடிக்கிறார்.

விநாயகர் சதுர்த்தியின் போது இத்திரைப்படத்தின் ஸ்டில்கள் வெளியானது. அதில் இளமையான தோற்றத்துடன் அஜீத் இருப்பது போன்று இருந்தது. இந்நிலையில், சால்ட் பெப்பர் லுக்கில் சில புகைப்படங்களும் தாடியுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. அவை படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.

இதன்மூலம் இத்திரைப்படத்தில் 3 தோற்றங்களில் அஜீத் தோன்றுவது உறுதியாகியுள்ளது. தற்போது ஹைதராபத்தில் அஜீத், அருண் விஜய், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

மொத்தப் படத்தையும் முடித்த பின்னரே தலைப்பை வெளியிடலாம் எனப் படக்குழு தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0

  • uma Saturday, 11 October 2014 11:25 AM

    thala pola varuma

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X