2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மான் விவகார வழக்கில் சல்மான்கானுக்கு 3 வருட சிறை?

Menaka Mookandi   / 2012 ஜூலை 27 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


1988ஆம் ஆண்டில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது சக நடிகைகளுடன் மான் வேட்டையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு ராஜஸ்தான் நீதிமன்றத்தினால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

வனவிலங்குகள் சட்டப்படி சல்மான்கானுக்கு எதிரான வழக்கு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

1988இல் 'ஹம் சாத்சாத் ஹைய்ன்' என்ற படப்பிடிப்பின் போது, நடிகைகளுடன் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற சல்மான்கான் இரு மான்களை சுட்டுக் கொன்றுள்ளார் என்பதுடன், சக நடிகைகளுக்கு விருந்தளித்தும் உள்ளார்.

இதற்கு விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அவர் சுட்ட மான்கள் அந்தப் பகுதி பழங்குடி மக்களின் வணக்கத்துக்குரிய விலங்காக இருந்தது. தொடர்ந்து சல்மான்கான் மீது வழக்கும் தொடரப்பட்ட நிலையில் அவர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தினால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளதால் திக்திக் மனதுடன் காத்திருக்கிறார் சல்மான்கான்.



You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Saturday, 28 July 2012 06:35 PM

    இந்த நடிகரது பெயரிலே மான் இருப்பதால்தான் அவர் மான் வேட்டை பிரியராக இருக்கிராரோ

    Reply : 0       0

    ibnuaboo Saturday, 28 July 2012 06:37 PM

    சல்மான்கானுக்கு மான் மீது பிரியம் ஏட்பட நியாம் உன்டு .அவர்பெயரிலே ஒரு மான் உன்டே

    Reply : 0       0

    படிக்காதவன்-அமான் Monday, 30 July 2012 02:10 PM

    மான் வேட்டையாடிய சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை கிடைத்தால் நிச்சயமா அந்தமான் சிறைக்குத் தான் அனுப்புவாங்க போல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X