Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 13 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மட்டத்தில் பல முப்பரிமாணப் (3 D) படங்கள் வெளிவரும் நிலையில் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களும் தமது திறமையை வெளிக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கவலைப்படுபவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் 'அம்புலி 3 D' படத் தயாரிப்பாளர்கள், இந்திய கிராமங்களை முப்பரிமாணத்தில் காட்டும் இந்தப் படம் இந்தியர்களுக்கு பெருமைப்படும் விதத்தில் அமையும் என கூறுகின்றனர்.
அசாதாரண உயிர்களின் தோற்றப்பாடுகளை விஞ்ஞான முறையில் அணுகும் பயங்கரப் படமான ஓர் இரவு என்னும் படத்தை கடந்த வருடம் தயாரித்தவர்களே 'அம்புலி 3 D' படத்தையும் தயாரிக்கின்றனர்.
தென்னிந்திய கிராமங்களில் கூறப்படும் நாட்டார் கதையொன்றின் அடிப்படையிலேயே இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.
அதி நவீன 'பெனசோனிக் 3டீ' கமராவினால் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கமெராவில் மனித கண்கள் போது இரண்டு வில்லைகள் உள்ளன. இந்தவகை கமெராதான் 'அவதார்' படத்தை எடுக்கப் பயன்பட்டது. இந்தப் படம் பற்றிய இணையத்தளமொன்று எதிர்வரும் 15ஆம் திகதி நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago