Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 27 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
84ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், 'தி ஆர்டிஸ்ட்' என்ற திரைப்படம் மொத்தமாக ஐந்து ஒஸ்கார் விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், 'தி ஆர்டிஸ்ட்' திரைப்படம் சிறந்த ஊமைத் திரைப்படமாக விருது பெற்றுள்ள அதேவேளை, இத்திரைப்படத்தின் நடிகரான ஜீன் டுஜார்டின்னுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. அத்துடன் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் லுடோவிக் பௌர்ஸ் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
மேலும், இந்தப் திரைப்படத்தின் இயக்குனர் மைக்கல் ஹசானாவிகஸ் சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார் விருதை வென்றுள்ளார். கருப்பு வெள்ளைத் திரைப்படமான இந்தப் திரைப்படம் ஏற்கனவே பல உலக விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 'அயர்ன் லேடி' திரைப்படத்தில் முன்னாள் பிரிட்டன் பிரதமராக நடித்த மெரில் ஸ்ட்ரீப், சிறந்த நடிகையாக ஒஸ்கார் விருது பெற்றுள்ளார். இது இவர் பெறும் 3ஆவது ஒஸ்கர் விருதாகும்.
இதற்கு முன்னர் க்ரமர் வேர்ஸஸ் கிரமர் (1979), சோபிஸ் சொய்ஸ் (1982) ஆகிய திரைப்படங்களுக்காக இவர் ஒஸ்கார் விருது பெற்றுள்ளார். இதுவரை 17 முறை ஒஸ்கார் விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒஸ்கார் விருது விழாவின் சிறந்த டொகியூமென்டரி திரைப்படத்துக்கான விருது டேனியன் ஜுங்கே மற்றும் ஷர்மீன் ஒபைத் சினோய் ஆகியோரின் 'சேவிங் பேஸ்' திரைப்படத்துக்குக் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் மீது அசிட் வீசி நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை இந்தத் திரைப்படம் விவரிக்கிறது.
ஜார்ஜ் க்ளூனி நடித்த 'தி டெசன்டன்ஸ்' திரைப்படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான ஒஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருது ஈரானின் 'ஏ செப்பரேஷன்' திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
மார்ட்டின் ஸ்கோர் செசயினின் 3டி திரைப்படமான ஹூகோவுக்கு சிறந்த சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆர்ட் டைரக்ஷன், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் 5 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago