2025 மே 19, திங்கட்கிழமை

கமலுக்கு 59; அனுஷ்காவுக்கு 32

Menaka Mookandi   / 2013 நவம்பர் 07 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக நாயகன் கமல் ஹாஸன் இன்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதேவேளை, நடிகை அனுஷ்காவும் தனது 32ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் திலகம், நடிகர் திலகம் ஆகியோருடன் நடித்து நடிப்பின் சிகரமாக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாஸன் இன்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான கமலுக்கு திரை உலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஸ்வரூபம் திரைப்படத்தை அடுத்து விஸ்வரூபம் 2 திரைப்படத்தை வெளியிடும் வேலையில் கமல் இறங்கியுள்ளார். முதல் பாகத்தை போன்று இல்லாமல் இரண்டாம் பாகத்தில் சென்டிமென்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

கமல் ஹாஸனின் பிறந்தநாளான இன்று விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. டிரெய்லரை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், ட்விட்டர் சமூக வலையமைப்பில் கமல் ஹாஸனுக்கு பிரபலங்கள், அவரது ரசிகர்கள் என்று ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கமல் ஹாஸன் தனது விஸ்வரூபம் 2 திரைப்படத்தை முடித்த பிறகு தனது நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதேவேளை, நடிகை அனுஷ்காவும் தனது 32ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாள் பரிசாக தெலுங்கு திரைப்படமான ருத்ரமா தேவியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
 
அனுஷ்கா, ஆர்யா நடித்துள்ள இரண்டாம் உலகம் திரைப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இந்த திரைப்படத்தில் அனுஷ்காவின் நடிப்பு மிரள வைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தெலுங்கில் இரு சரித்திர திரைப்படங்களில் நடிக்கிறார்.

பல கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வரும் ருத்ரமா தேவி திரைப்படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவர் ரூ. 5 கோடி மதிப்புள்ள நகைகளை அணிந்து நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் அனுஷ்கா கவர்ச்சியாக உடை அணிந்து ஆடும் பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். அந்த காட்சியில் ஆடையை குறைத்து நகைகளால் அனுஷ்காவை அலங்கரித்துள்ளனர்.

இதனால் அவர் வெட்கி நெளிய இயக்குனர் குணசேகர் யூனிட் ஆட்களை வெளியே அனுப்பிவிட்டு குறிப்பிட்ட சிலரை மட்டும் வைத்து பாடலை படமாக்கினாராம். இந்த ருத்ரமா தேவி திரைப்படத்திற்காக அனுஷ்கா 15 கிலோ வரை எடை குறைத்துள்ளாராம்.





You May Also Like

  Comments - 0

  • alexpandiyan Thursday, 07 November 2013 06:23 AM

    உலக நயகன் கமல் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X