Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிக்கெட் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான விடயம். அதிலும் தமக்கு பிடித்த முன்னணி திரை நட்சத்திரங்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்றால் ரசிகர்கள் சும்மாவா விட்டு விடுவார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி நட்சத்திரங்கள் பங்கேற்றும் மெகா கிரிக்கெட் போட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினி முன்னிலையில் எதிர்வரும் ஐனவரி மாதம் நடைபெறவிருக்கிறது.
பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் கிரிக்கெட் விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். இவர்களின் திறமையை வெளிக்கொணரும் விதமாகவும், திரை நட்சத்திரங்கள் கிரிக்கெட் விளையாடினால் அதற்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு மற்றும் வருவாயை நல்ல விடயங்களுக்கு பயன்படுத்தும் நோக்கிலும் பிரபலங்களின் கிரிக்கெட் அமைப்பு ஒன்றை செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) என்ற பெயரில் ஆரம்பித்துள்ளனர்.
இந்த அமைப்பின் அறிமுக விழா நேற்று சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. கிரிக்கெட் அமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக மேடையேறிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியதாவது:-
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழி பட கலைஞர்களும் பங்கேற்கும் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 22, 23, 29, 30 ஆகிய 4 தினங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ் நடிகர்களைக் கொண்ட அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. அணியின் தலைவராக சூர்யா தெரிவாகியுள்ளார். விஜய்யுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
நான், ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, கார்த்தி, ஷாம், அப்பாஸ், ஜெய், அம்சவர்தன், ரமணா, விக்ராந்த், ஜீவா, ஆர்யா, மாதவன், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் இந்தப் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தெலுங்கு அணியில் சிரஞ்சீவி, நாகர்ஜுன், என்.டி.பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரும் இந்தி அணியில் சல்மான் கான், சுனில் ஷெட்டி உட்பட பல பிரபலங்களும் கன்னடத்தில் சுதீப், புனித் ராஜ்குமார் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இப்போட்டிகள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் வெற்றிபெரும் அணிக்கு 25 இலட்சம் ரூபா பரிசு வழங்கப்படவுள்ளது. இந்தத் தொகை பொதுச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் போட்டியில் பங்குபற்றும் அணிகளுக்கான பெயர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், மும்பை அணிக்கு 'மும்பை ஹீரோஸ'; என்றும் கன்னட அணிக்கு 'கன்னட ரோயல்ஸ்' என்றும் தெலுங்கு அணிக்கு 'தெலுங்கு டைகர்ஸ்' என்றும் சென்னை அணிக்கு 'சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்' என்றும் பெயர்களிடப்பட்டுள்ளன.
சரி யார்தான் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே!...
sham Wednesday, 22 December 2010 10:05 PM
adada adputham..
Reply : 0 0
M.Jaffar Monday, 27 December 2010 11:19 PM
சோழியன் குடும்பி சும்மாவா ஆடும் ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025