2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

64ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா

George   / 2017 மே 03 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

64ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து, சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சுந்தர் ஐயர் பெற்றனர். சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட “ஜோக்கர்” திரைப்படம் சார்பாக அதன் இயக்குநர் ராஜூ முருகன், விருதினை பெற்றார்.

“தர்மதுரை” திரைப்படத்தின் “எந்த பக்கம் பாடலுக்காக” வைரமுத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரைப்படமான "ஜனதா கேரேஜ்”இல் பணியாற்றியதற்காக நடன இயக்குநர் ராஜூ சுந்தரத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் தனஞ்செயன், மோகன்லால் உள்ளிட்ட பலரும் தங்களுக்கான தேசிய விருதினை பெற்றுக் கொண்டனர்.

“புலி முருகன்” திரைப்படத்தில் பணியாற்றிய சண்டை இயக்குநர் பீட்டர் ஹெயின், தேசிய விருதினை பெற்றுக் கொண்டார். அதேபோல், இந்தியில் சோனம் கபூர், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோரும் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X