2025 மே 21, புதன்கிழமை

'இப்படி இருந்தா நடிக்கிறேன்' நயனின் புது நிபந்தனை

George   / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டோரா, அறம் திரைப்படங்களில் நடித்து முடித்து விட்ட நயன்தாரா அடுத்தபடியாக இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் திரைப்படங்களில் நடிக்கிறார்.

இதையடுத்தும் அவரை வைத்து திரைப்படம் இயக்க இயக்குநர்கள்  நீண்ட கியூவில் நிற்பதால் இயக்குநர் விக்னேஷ்சிவன், நயன்தாராவுக்கான கதைகளை கேட்டு செலக்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

சமூக நோக்கமுள்ள கதைகள் பக்கம் திரும்பியுள்ள நயன்தாரா, அறம், இமைக்கா நொடிகள் திரைப்படங்களை பெரிதாக எதிர்பார்க்கிறார்.

அதோடு, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம், ஆக்சன் கலந்த கதைகளை சொல்லச்சொல்கிறார்.

உதாரணத்திற்கு இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் தான் நடித்து வரும் பொலிஸ் வேடம் தனக்கு மிகவும் பிடித்தமான வேடம் என்று சொல்லும் நயன்தாரா, விஜயசாந்தி பாணியில் பெண்களை தைரிய லட்சுமியாக வெளிப்படுத்தும் கதைகளாக சொல்லுங்கள் என்கிறாராம்.

இதனால் நயன்தாராவிடம் கதை சொல்ல காத்திருந்த சில இயக்குநர்கள் அவரது மனநிலை அறிந்து விஜயசாந்தி பாணிய கதைகளை அவருக்கு தயார் பண்ணி வருகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X