2025 ஜூலை 05, சனிக்கிழமை

'கொடி' இசை வெளியீடு: தனுஷின் அறிவிப்பு

George   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கொடி' திரைப்படத்தின் இசை அல்பம் தயாராகவிட்டதாகவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்தின் முதன்மை அல்பத்தை ஒப்படைத்துவிட்டதாகவும், 'தொடரி' வெளியீட்டுக்குப் பின்னர் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு திகதி, முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தை, மகன் என இருவேடங்களில் தனுஷ் நடித்துள்ள இந்த திரைப்படத்தில்  த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'எதிர்நீச்சல், 'காக்கி சட்டை' திரைப்பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .