George / 2017 பெப்ரவரி 19 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

“மாவீரன் கிட்டு” திரைப்படத்தை அடுத்து, ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார் சுசீந்திரன். அதில் ஒரு திரைப்படம் “அறம் செய்து பழகு”. இந்த திரைப்படத்தில் விக்ராந்த், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இணைந்து நடித்து வருகின்றனர்.
தெலுங்கு நடிகை மெஹ்ரின் பிர்ஷதா நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராவதுடன் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிகட்ட பணிகள் நடக்கிறன.
இந்த நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் இன்னொரு திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பும் நடந்துள்ளது.
நான்கு இளைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அந்த திரைப்படம் குறித்து விசாரித்தபோது, ஏற்கெனவே கார்த்தியை வைத்து தான் இயக்கிய “நான் மகான் அல்ல” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இயக்குகிறாரம் சுசீந்திரன்.
இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை அடிப்படையில் இத்திரைப்படம் உருவாகிறதாம்.
14 minute ago
20 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
22 minute ago