2025 மே 12, திங்கட்கிழமை

‘பீட்டா மன்னிப்புக் கேட்க வேண்டும்’

George   / 2017 ஜனவரி 22 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீட்டா அமைப்பு, அண்மையில் நடிகர் சூர்யா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த கருத்துக்கு 7 நாட்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சூர்யாவின் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் பீட்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  

சூர்யாவின் ‘சி 3’ திரைப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் கடந்த சில நாட்களாக சூர்யா ஈடுபட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து கூறிய பீட்டா நிர்வாகி ஒருவர் ‘சி 3’, படத்தின் மலிவான விளம்பரத்திற்காக சூர்யா ஜல்லிக்கட்டு குறித்து பேசி வருவதாக கூறினார். இதற்கு சூர்யா தரப்பில் இருந்து தற்போது வக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

சூர்யா ஏற்கனவே பலமுறை ஜல்லிக்கட்டுக்காகவும், மற்ற பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார்.
w ‘சி 3’ திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் மலிவான விளம்பரம் தேடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

எனவே அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து கூறிய பீட்டா நிர்வாகி நிபந்தனையற்ற மன்னிப்பை எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் அந்த மன்னிப்பு கடிதத்தை ஊடகங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் பீட்டா நிர்வாகிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X