George / 2017 மார்ச் 08 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதை பார்க்கும்போது வாழ்வதற்கே அச்சமாக இருக்கிறது. பெண்கள் ஆபாசமாக உடை அணிகிறார்கள் அதுதான் இதற்கு காரணம் என்று காலம் காலமாக சொல்லி வருகிறார்கள். இது பெண்ணுக்கு தீங்கு செய்துவிட்டு அவள் மீது குற்றம் சொல்கிற போக்கு” என, நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
ஜோதிகா நடிப்பில் குற்றம் கடிதல் இயக்குனர் பிரம்மா இயக்கும் “மகளிர் மட்டும்” திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் ஊர்வசி, மகளிர் தினத்துக்காக வழங்கிய சிறப்பு பேட்டியில் இதனைக் கூறியுள்ளார்.
“3 வயது குழந்தையை தூக்கி கொண்டு போய் பலாத்காரம் செய்கிறான். அந்த குழந்தை என்ன ஆபாச உடை அணிந்திருந்தது என்று சொல்லுங்கள். 80 வயது மூதாட்டி என்ன ஆபாச உடை அணிந்து செல்கிறாள் சொல்லுங்கள். ஆண்களின் வக்கிரம் அதிகமாகிவிட்டது என்பதை தவிர வேறு காரணமல்ல.
அனைத்துக்கும் காரணம் செல்போன்தான். இன்றைக்குள்ள விஞ்ஞான வசதியை பயன்படுத்தி ஒவ்வொருவன் கைக்குள்ளும் ஆபாச படங்கள் இருக்கிறன. முன்பு மறைந்து பார்த்த படங்களை இப்போது கையில் வைத்துக் கொண்டு எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கிறான். அப்படி பார்க்கும்போது அவனுக்குள் உடல் பசி உருவாகிறது. அந்த பசியை தணித்துக் கொள்ள அவர் குழந்தை என்றும் பார்ப்பதில்லை, முதியவள் என்றும் பார்ப்பதில்லை.
சட்டசபைக்குள் இருந்து கொண்டு எம்.எல்.ஏக்கள் ஆபாச படம் பார்க்கிறார்கள். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது. இணையதளங்களில் ஆபாச படங்களை தடுக்க வேண்டும். அது சாத்தியில்லை என்றால் பாலியல் குற்றவாளிகளுக்கு மற்றவர்கள் பயப்படுகிற மாதிரி தண்டனை வழங்க வேண்டும்” என்றார் ஊர்வசி.
16 minute ago
22 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
24 minute ago