George / 2017 ஜனவரி 29 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல பொலிவூட் திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, “பத்மாவதி” என்ற ஹிந்தி திரைப்படத்தை இயக்கி வருகிறார். தீபிகா படுகோனே, சாஹித் கபூர், ரன்வீர்சிங் ஆகியோர் நடித்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கார்னிசேனா என்ற அமைப்பை சேர்ந்த சிலர், படப்பிடிப்பில் புகுந்து இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது தாக்குதல் நடத்தி, படப்பிடிப்பு அரங்குகளை சேதப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி, 1300ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த வீரப்பெண்மணியான பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கி வருவதாகவும், இந்து மதத்தை சேர்ந்த அவர் முஸ்லீம் மன்னர் ஒருவரை மணந்துகொண்டதாகவும் அதையே பன்சாலி திரைப்படமாக்கி வருவதாகவும் கருதி, கார்னிசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரபல பொலிவூட் இயக்குநர்கள் ராம்கோபால் வர்மா, மகேஷ்பட், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின்போது, தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. தாக்குதல் சம்பவம் பற்றி இவர்கள் மூன்று பேரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
14 minute ago
20 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
22 minute ago