2025 மே 19, திங்கட்கிழமை

+1 பரீட்சை எழுதினார் லட்சுமி மேனன்

Menaka Mookandi   / 2014 மார்ச் 04 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி பரீட்சை எழுதி தேர்ச்சியும் பெற்ற நடிகை லட்சுமி மேனன், இப்போது ப்ளஸ் வன் (தரம் 11) பரீட்சை எழுதுகிறார்.

நடிப்புக்கு இணையான முக்கியத்துவத்தை படிப்புக்கும் தந்து வருகிறார் லட்சுமி மேனன். லட்சுமி மேனன் நடிக்க வந்தபோது அவர் எர்ணாகுளத்தில் 9ஆம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தார். 9ஆம் வகுப்பு முடிந்து பத்தாம் வகுப்பு வந்தபோது அவரிடம் ஏராளமான படங்கள் கைவசம் இருந்தன.

பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து வந்தாலும், படிப்பை மட்டும் விடவில்லை. கிடைத்த நேரத்தில் படித்து வந்தார். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார்.

இந்த ஆண்டு நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, சிப்பாய் போன்ற படங்களில் நடித்து வரும் லட்சுமி மேனன், படிப்பிலும் கவனம் செலுத்தினார். நேற்று அவர் தனது ப்ளஸ் ஒன் தேர்வை எர்ணாகுளத்தில் எழுதினார்.

இதுகுறித்து லட்சுமிமேனன் கூறும்போது, ''சினிமாவை விட படிப்பு தான் முக்கியம். இன்று ஆங்கில தேர்வு எழுதினேன். மொத்தம் ஐந்து பாடங்கள் எழுத வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் தான் தேர்வு நடக்கிறது. படிப்பதற்கு இடையில் ஒருநாள் விடுமுறை கிடைக்கிறது. தேர்வு முடியும் வரை எங்கும் செல்வதாக இல்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X