Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2023 மார்ச் 19 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்த ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார்.
தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் ஹன்சிகா. கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது இணைய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் முன் தொழிலதிபர் சோஹேல் கதுரியா தனக்கு காதலைச் சொல்லும் புகைப்படங்களை ஹன்சிகா இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.
இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த முண்டோடா கோட்டை அரண்மனையில் தனது நண்பர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துக் கொண்டார்.
ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின் சமீபத்திய எபிசோடில், ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி, மணமகன் சோஹேல் கதுரியாவின் குடும்பத்தினரிடம் நிமிடத்திற்கு ரூ. 5 லட்சம் கேட்டதாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹன்சிகா தாயார் மோனா மோத்வானி, சோஹேலின் அம்மாவை அழைத்து விழாக்களுக்கு தாமதமாக வருவதைப் பற்றி புகார் செய்தேன். அது என்னவென்றால், இன்று நீங்கள் தாமதமாக வந்தால், ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். நான் இந்த கோரிக்கையை வைக்கிறேன் என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago