2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ரூ.100 கோடி வசூல் சாதனையில் 'ஆரம்பம்'

Menaka Mookandi   / 2013 நவம்பர் 11 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர்கள் கமல் ஹாஸன், சூர்யா, ஷாரூக் கான் ஆகியோர் அஜீத்தின் 'ஆரம்பம்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை அள்ளிக் குவித்துள்ளனர்.

தீபாவளிக்கு ரிலீஸான அஜீத் குமாரின் 'ஆரம்பம்' திரைப்படம் அவரது ரசிகர்கள் தவிர திரையுலக பிரபலங்களையும் ஈர்த்துள்ளது. 'ஆரம்பம்' இந்தியா தவிர வெளிநாடுகளிலும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைபடம் ஏற்கனவே ரூ.50 கோடியை வசூலித்துவிட்டது. மேலும் ரூ.100 கோடி வசூலை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 31ஆம் திகதி வெளியாகி வெற்றிகரமாக வசூல் சாதனை படைத்து ஓடிக் கொண்டிருகிறது அஜீத்தின் 'ஆரம்பம்' திரைப்படத்தை பார்த்த ஷாருக் கான் ஆரம்பம் நன்றாக வந்துள்ளது என்று அஜீத்துக்கு போன் போட்டுப் பாராட்டினாராம். அசோகா திரைப்படத்தில் ஷாருக் கான், அஜீத் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து அஜீத்தின் ஆரம்பம் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புகிறார் அக்ஷய் குமார். மேலும் ரீமேக் உரிமையை வாங்க தான் தயாராக இருப்பதாக அவர் தயாரிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸன், விஸ்வரூபம் 2 திரைப்பட வேலைகளில் பிஸியாக உள்ளார். இருப்பினும் இதற்கிடையே 'ஆரம்பம்' படத்தை பார்த்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர் 'ஆரம்பம்' திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாராட்டி எழுதியிருந்தார். ஃபேஸ்புக் கணக்கை ஆரம்பித்ததும் அவர் முதன்முதலில் எழுதியது 'ஆரம்பம்' திரைப்படத்தை பற்றி தான்.

நடிகர் சூர்யா கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து சென்னை சத்யம் சினிமாஸில் 'ஆரம்பம்' திரைப்படம் பார்த்துள்ளார். அஜீத்தின் மங்காத்தா திரைப்படத்தில் நடித்த லக்ஷ்மி ராய் 'ஆரம்பம்' திரைப்படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

'ஆரம்பம்' திரைப்படத்தை பார்த்த லிங்குசாமி படம் அருமை என்று தெரிவித்துள்ளார். படத்தில் ஆர்யா மிகவும் கூலாக உள்ளார் என்று அவர் பாராட்டியுள்ளார்.




  Comments - 0

  • raviu Tuesday, 12 November 2013 10:27 AM

    மொக்கை.

    Reply : 0       0

    ronie Tuesday, 12 November 2013 04:56 PM

    படம் சூப்பர்... அதுவும் தலட படம் என்டால் சொல்ல தேவல்ல...

    Reply : 0       0

    danish Wednesday, 13 November 2013 10:43 AM

    ஒஹ் இத்திரைபடம் ஏற்கனவே ரூ.50 கோடியை வசூலித்துவிட்டது. மேலும் ரூ.100 கோடி வசூலை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹஹஹஹஹஹஹ......!!!

    யாரும் இல்லாத கடையில யாருக்கு tea ஆத்திரிங்க...

    Reply : 0       0

    billal Monday, 18 November 2013 03:53 AM

    நல்ல படம்... நாட்டுக்கு நல்ல கருத்து

    Reply : 0       0

    sajisafi Monday, 18 November 2013 02:22 PM

    பொலிஸாரின் கிரிமனல்களை தைரியமாக சொன்னதற்கு தலக்கு சல்யும்...

    Reply : 0       0

    shakar Sunday, 24 November 2013 09:03 AM

    சும்மா என்ன பில்டப்

    Reply : 0       0

    J.Karthikeyan Tuesday, 26 November 2013 04:34 PM

    தல தல தான்....தல போல வருமா.....

    Reply : 0       0

    J.Karthikeyan Tuesday, 26 November 2013 04:37 PM

    தல தல தான்....தல போல வருமா...

    Reply : 0       0

    meena Thursday, 28 November 2013 08:11 AM

    நல்ல படம்

    Reply : 0       0

    ayyappan Monday, 02 December 2013 11:52 AM

    இதெல்லாம் ஒரு சாதனையா???

    Reply : 0       0

    simbu Monday, 30 December 2013 11:54 AM

    ஆரம்பம் நல்லா இல்லனு சொல்றவன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X