2025 மே 19, திங்கட்கிழமை

100 கோடியை தாண்டிய 'ஐ' வசூல்

George   / 2015 ஜனவரி 18 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஐ' திரைப்படம் கடந்த 14ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிக வரவேற்புடனும் இலங்கையில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் நல்ல வரவேற்புடனும் இத்திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. 

திரைப்படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் சுமார் 30 கோடி இந்திய ரூபாய் அளவில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் பொங்கல் விடுமுறை தினம் என்பதால் ஐ திரைப்படத்தின் வசூல் 25 கோடியிலிருந்து 30 கோடி வரை உலக அளவில் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு நாட்களாக தென்னிந்திய மாநிலங்களில் ஐ திரைப்படத்தின் வசூல் முதல் நாளுடன் ஒப்பிடும் போது ஓரளவுதான் குறைந்து காணப்பட்டது. சனிக்கிழமை(17)  காணும் பொங்கல் என்பதால் முதல் நாள் அளவிற்கு வசூல் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்த நான்கு நாட்களிலேயே ஐ திரைப்படத்தின் மொத்த வசூல் 100 கோடி இந்திய ரூபாயிலிருந்து 110 கோடி இந்திய ரூபாய் வரை இருந்திருக்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

வெளிநாடுகளில் திரைப்படத்தை வாங்க முயற்சித்து வாங்க முடியாமல் தவித்த சில நிறுவனங்கள் திரைப்படத்தைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் தெரிகிறது. அதே போல், ஆந்திராவிலும் சில சிறிய தயாரிப்பாளர்கள் ஐ திரைப்படத்தின் வசூலைப் பார்த்து பொறமைப்பட்டு எதிர்மறையான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

அதைபற்றியெல்லாம் கவலைபடாத மக்கள் ஐ திரைப்படத்தை ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும் என்று திரையரங்குகளுக்கு கூட்டம் கூட்டமாய் வருகிறார்களாம். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X