Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2020 நவம்பர் 10 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா இருவரும் கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம் ‘சில்லுனு ஒரு காதல்’.
இருவரின் திருமணத்திற்கும் முன்பு கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
திருமணத்துக்கு பின் ஜோதிகா நடிக்கும் படங்களை தயாரித்து வரும் சூர்யா, அவருடன் இணைந்து நடிக்கவில்லை. இருவரும் மீண்டும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
அண்மையில், காணொளி வாயிலாக, பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய சூர்யா, அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதா ஷமீம் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தை மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
54 minute ago
3 hours ago