2025 மே 19, திங்கட்கிழமை

15 வருடங்களின் பின் மீண்டும் 'மருதநாயகம்'

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


15 ஆண்டுகளுக்கு முன் உலக நாயகன் கமல்ஹாஸனால் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட 'மருதநாயகம்' திரைப்படத்தை மீண்டும் தூசு தட்டப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் கமல்ஹாசனால் கடந்த 1997ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் 'மருதநாயகம்'. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கான் என்ற வீரரைப் பற்றிய சரித்திர திரைப்படம் இது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்படுவதாக அறிவித்து, பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் கையால் ஆரம்பித்து வைக்கப்பட்ட திரைப்படம் இது. சிவாஜி கணேசன், ரஜினி, இளையராஜா என திரையுலகமே இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டது.

1997ஆம் ஆண்டில் இத்திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு 50 கோடி ரூபா தேவைப்பட்டது. 1997இல் இது மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படம். நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்தத் திரைப்படம் பின்னர் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

திரைப்படத்துக்கு முதலீடு செய்வதாகக் கூறிய வெளிநாட்டவர்கள், நம்பிக்கையின்றி கைவிரித்துவிட்டதாகவும், தானே அந்த திரைப்படத்தை தயாரிக்கும் அளவுக்கு சூழல் உருவானதும் மீண்டும் திரைப்படத்தைத் தொடங்குவேன் என்றும் கமல் கூறியிருந்தார்.

தற்போது 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பில் கமலஹாசன் அதன் இரண்டாவது பாகத்தையும் தயாரித்து வெளியிடும் இறுதிக் கட்ட வேலைகளில் உள்ளார். விஸ்வரூபம் வெற்றியும், வெளிநாடுகளில் அந்த திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பும் மீண்டும் மருதநாயகத்தை இயக்கும் எண்ணத்தை அவருக்கு உருவாக்கியுள்ளது.

அவரது வெளிநாட்டு நண்பர்கள் பலரும் அந்த திரைப்படத்திற்குத் தேவையான பொருளுதவியை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்களாம். எனவே, லிங்குசாமியின் திரைப்படம் முடிந்த பிறகு இந்த மருதநாயகத்தை மீண்டும் கையிலெடுப்பார் கமல் என்கிறார்கள்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே இந்தப் பேச்சு அடிக்கடி கிளம்புவது வழக்கம். கமலும் இதை மறுப்பதில்லை. கடந்த முறை இந்த திரைப்படத்தில் ரஜினி நடிப்பார், கமல் இயக்குவார் என்றெல்லாம் பேச்சு கிளம்பியது. பின்னர் அதை கமலே மறுத்துவிட்டார்.







You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Friday, 20 September 2013 08:16 AM

    அருமையான செய்தி மட்டுமல்ல எனக்கும் இன்னும் பல இச்செய்தியுடன் தொடர்புடையவர்களுக்கும் தேவையான செய்தி. சில வருடங்களுக்கு இதே மாதிரியான மருதநாயம் திரைப்பட செய்தி நம் தமிழ்மீரரில் வெளியானபோது என் கொம்மென்ட்டில் நான் மருதநாயகம் என்பவர் இஸ்லாத்தை தழுவிய யூசுப்கான் என்னும் ப்ரிட்டிசாரை எதிர்த்த சுதந்திரப் போராளி என்று குறிப்பிட்டேன். ஏன் எனில் அவரது வரலாற்று நூல் என்னிடம் உள்ளது. ஆனால் என் கருத்தை சிலர் விமர்சித்தனர்...

    Reply : 0       0

    ibnuaboo Friday, 20 September 2013 08:22 AM

    சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்த மருதநாயகம் யூசுப்கான் அல்ல அவர் ஒரு போதும் இஸ்லாமியராக மாறவில்லை என்றும் யூசுப் கான் என்பவர் வேறுஆள் என்றும் தமில் மீரரில் வாதிட்டனர். இன்றைய இச்செய்தி அன்று நான் குறிப்பிட்ட மருத நாயகமே யூசுப்கான் என்பதை உண்மைபடுத்தியதால் தமிழ்மிரருக்கு என் நன்றி...

    Reply : 0       0

    asmeer.a Friday, 20 September 2013 03:09 PM

    கூடிய சீக்கிரம் வெளியிடட்டும்.

    Reply : 0       0

    arjun Friday, 20 September 2013 03:56 PM

    எக்ஷெசலென்ட் ஜொப்

    Reply : 0       0

    praba Thursday, 26 September 2013 02:27 PM

    புலி வருது கதையோ தெரியல‌

    Reply : 0       0

    KR Sunday, 06 October 2013 08:17 PM

    கமலின் இன்னுமொரு எக்ஷ்சலன்ட் படைப்பாக இருப்பது நிச்சயம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X