2025 மே 10, சனிக்கிழமை

15ஆம் திகதி “மகளிர் மட்டும்”

Editorial   / 2017 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

36 வயதினிலே திரைப்படத்துக்குப் பின்னர், ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் “மகளிர் மட்டும்”. “குற்றம் கடிதல்” திரைப்படத்தை இயக்கிய பிரம்மா, இந்தத் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா, லிவிங்ஸ்டன், நாசர் ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். "அடி வாடி திமிரா புலியோட்டும் முறமா..." என்ற பாடல் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. திரைப்படத்தை, 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில், சூர்யாவே தயாரித்துள்ளார்.

ஒரு ஆவணப்பட இயக்குநர், நடுத்தர வயதை தாண்டிய பெண்களின் பிரச்சினைகளை பேசுகின்ற ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இதற்காக, அவர்களை அழைத்துக் கொண்டு, இந்தியா முழுவதும் சுற்றுகிறார் என்பது மாதிரியான ஒரு பயணக் கதை. காமெடி, செண்டிமெண்டுடன் குடும்ப பெண்களிள் உளவியல் பிரச்சினைகளை பேசுகிற திபை்படம். இதில், ஆவணப்பட இயக்குனராக ஜோதிகா நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாக, பல மாதங்கள் ஆகின்றது. பண மதிப்பிழப்பு, தியேட்டர் ஸ்டிரைக், பெரிய திரைப்படங்கள் ரிலீஸ் போன்ற பல காரணங்களால், ரிலீஸ் தள்ளிபோடப்பட்டுக்கொண்டே வந்தது. தற்போது அடுத்த மாதம் 15ஆம் திகதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X