2025 மே 09, வெள்ளிக்கிழமை

2.0 படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாராய்

Editorial   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் 2.0 திரைப்படத்தில் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். விஞ்ஞானி, ரோபோ என இரட்டை வேடத்தில் ரஜினி நடித்திருக்கும் இத்திரைப்படத்தில், நாயகியாக எமி ஜெக்ஸன் நடித்திருந்தாலும், அவரும் இன்னொரு ரோபோவாகவே வருகிறாராம். கடந்த 2 வருடங்களுக்கும் மேல், இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தும், தொழில்நுட்ப கிராபிக்ஸ் காட்சிகள் காரணமாக, படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இப்படத்துக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ‘காலா’ திரைப்படம் முற்றிலும் முடிந்து சமீபத்தில் தணிக்கையில் யு/ஏ சான்றிதழும் பெற்றுவிட்டது. எதிர்வரும் 27ஆம் திகதி, ‘காலா’ திரைப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2.0 படத்தில், சஸ்பென்ஸ் பாத்திரமாக ஐஸ்வர்யாராய் நடித்திருக்கிறார் என, பட வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. விஞ்ஞானி ரஜினியின் மனைவியாக இவர் நடிக்கிறாராம். ஆனால் படத்தில் ஒருசில காட்சிகளில் மட்டுமே அவர் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இவரது கதாபாத்திரத்துக்கு டப்பிங் கலைஞர் ஒருவர், டப்பிங் பேசியதாக கூறியதையடுத்தே, இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X