Editorial / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜினியின் '2.0', விஜயின் 'சர்கார்', சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் படம், மணிரத்னத்தின் 'செக்கச்சிவந்த வானம்' என தமிழிலேயே நிறைய படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் ஏ.ஆர்.ரஹ்மான். தவிர பொலிவுட், ஹொலிவுட் படங்கள், இசை நிகழ்ச்சிகள் என தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றார் இசைப்புயல்.
இந்நிலையில் அவருடைய கதை - தயாரிப்பில் உருவாகும் '99 சோங்க்ஸ்' படத்தின் வெளியீட்டு வேளைகளில் இறங்கியிருக்கிறார்.
அண்மையில் செவ்வி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், "இந்தப் படத்திற்கான உழைப்பு பெரிது, அதனால் நிறைய காலமும் தேவைப்பட்டது. ஒன்று மிகப் பெரிய கொண்டாட்டத்தைப் பெரும். இல்லை எனில் தூக்கி எரிந்துவிடுவார்கள். இதில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
மேலும், ஷங்கரின் 2.0 திரைப்படம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், "2.0 போன்ற படத்தை ஷங்கரால் மட்டும்தான் உருவாக்க முடியும். அவர் விரும்பும் தரத்திற்கு வரும் வரை மிக மெனக்கெட்டு வருகிறார். படத்தில் ஒரு பாடலைப் பார்த்தேன் எந்த கிராபிக்ஸும் இல்லாமலேயே அவ்வளவு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. முக்கியமாக படத்தின் மொத்த இறுதிக்கட் காட்சியும் பார்த்தேன். எனக்கு அதன் வியப்பு இன்னுமும் நீங்கவில்லை. ஷங்கர் போன்ற திறைமைசாலி இந்தியாவுக்கே பெருமை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
9 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Nov 2025