Editorial / 2020 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்த நாளையொட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள 2 கிராமங்களை தத்தெடுத்துள்ளார்.
கொரோனா பரவலால் வேலைகள் இழந்து தவிப்பவர்களுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நடிகர், நடிகைகள் பலர் உணவு பொருட்களையும் நிதி உதவிகளையும் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்த நாளையொட்டி மராட்டியத்தில் உள்ள பதார்தி, சக்கூர் ஆகிய 2 கிராமங்களை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்துள்ளார்.
இலங்கை நடிகையான ஜாக்குலின் இந்தி, தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.
கிராமங்களை தத்தெடுத்தது குறித்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியதாவது:- "கொரோனா தொற்றினால் மக்கள் பலர் பாதித்துள்ளனர். இது அனைவருக்கும் கஷ்டமான காலம்.
பலர் அடிப்படை தேவைகளுக்காக போராடுகிறார்கள். மக்களுக்கு நம்மால் ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து உள்ளேன்" என்றார்.
இந்த கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஜாக்குலின் ஊட்டச்சத்து உணவுகள் வழங்குதல், வேலை வாய்ப்பு பயிற்சி, சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல பணிகளை செய்ய உள்ளார்.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026