2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அலைபாயுதே பாகம் 2

George   / 2015 ஜனவரி 04 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிரத்னம் இயக்கும் ஓகே கண்மணி  திரைப்படம் அலைபாயுதே திரைப்படத்தின் 2ஆம் பாகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அலைபாயுதே திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. மாதவன், ஷாலினி ஜோடியாக நடித்திருந்தனர்.

மணிரத்னம் இயக்கினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். இதில் இடம் பெற்ற பச்சை நிறமே பச்சை நிறமே, சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே, யாரோ யாரோடி, எவனோ ஒருவன் போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை 'ஒகே கண்மணி' என்ற பெயரில் மணி ரத்னம் திரைப்படமாக்குகிறார்.

இந்த தகவலை திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ஓகே கண்மணி திரைப்படத்தை அலைபாயுதே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம். ஆனாலும் இந்த திரைப்படத்தின் கதை புதுமையாக இருக்கும். இப்போதைய கால கட்டத்துக்கு ஏற்றது போல் கதை இருக்கும். சிறந்த காதல் கதை என்றார்.

ஓகே கண்மணி திரைப்படத்தில் துல்சர் சல்மான், நித்யாமேனன் ஜோடியாக நடிக்கின்றனர். தமிழ், மலையாளத்தில் தயாராகிறது. இந்த திரைப்படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .