Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
'காதல்' என்ற சொல் பிரபுதேவாவுக்கு ரொம்ப பொருத்தமானது. 'காதலன்' படத்தின் மூலமாகத்தான் திரையுலகில் நாயகனாக காலடி பதித்தார் என்பது யாவருக்கும் தெரியும். அதேபோல், இப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நயன்தாராவுடன் காதல் கசிந்ததால் பல எதிர்ப்புகளுக்கு முகம்கொடுத்து வருகின்றமையும் தெரிந்ததே.
இந்நிலையில் ஜெயம் ரவி - ஹன்ஷிகாவின் நடிப்பில் ‘இச்’ என்னும் படத்தினை இயக்கி வந்தார் பிரபுதேவா. ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மன்ட் சார்பாக கல்பாத்தி எஸ்.அகோரம் இத்திரைப்படத்தினை தயாரித்து வருகிறார். ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படப்பிடிப்பின் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் ‘இச்’ திரைப்படத்தினை ‘எங்கேயும் காதல்’ என பெயர் மாற்றியிருக்கிறார்கள். ‘எங்கேயும் காதல்’ திரைப்படத்தின் இசை வெளியீடு ஒக்டோபர் 3ஆம் திகதி சத்தியம் திரையரங்கில் நடைபெறவுள்ளது.
சொனி நிறுவனம் ‘எங்கேயும் காதல்’ திரைப்படத்தின் பாடல் உரிமையினை பெற்றிருக்கின்றமை சிறப்பானதாகும். மிகப் பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைக்கவிருக்கிறது என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
‘காதல்’ என்பதில் அதிக ஈடுபாடுகொண்ட பிரபுதேவாவுக்கு இத்திரைப்படமும் பாரிய வெற்றியைப் பெற்றுத்தரும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற விருதுவழங்கும் நிகழ்வொன்றில் உத்தியோகபூர்வமாக திருமணம் செய்துகொள்ளாத பிரபுதேவா – நயன்தாரா தம்பதிகளுக்கு, இவ்வாண்டின் 'சிறந்த தம்பதி' என்ற விருது வழங்கியிருக்கின்றமை திரையுலகில் கேலிக்கூத்தான விடயம் என முணுமுணுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Zaman Tuesday, 28 September 2010 08:50 PM
வாவ் ......... என்ன கொடும சார்?
Reply : 0 0
sriram Thursday, 25 November 2010 04:37 PM
padal enaku romba pidichiruku..........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
25 minute ago
1 hours ago