2025 மே 21, புதன்கிழமை

புதிய கெட்அப்பில் அஜித்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெரும் சர்ச்சை பரபரப்பு இரண்டினையும் ஒருமனே கொண்டு உருவாக காத்திருக்கும் அஜித்தின் 50ஆவது திரைப்படம் 'மங்காத்தா'. நடிகைகள் தேர்விலும் பல சர்ச்சைகள் நிலவுகின்றன. தினமும் ஒரு நடிகையின் பெயர் மங்காத்தாவுக்காக அடிபடுகிறது.

இந்நிலையில்தான் மங்காத்தாவின் இயக்குநர் வெங்கட் பிரபு உத்தியோகபூர்வமாக படப்பிடிப்பினை அறிவித்திருக்கிறார். ஒக்டோபர் 20ஆம் திகதி 'மங்காத்தா' படப்பிடிப்புகள் தொடங்கவிருக்கின்றன. இத்திரைப்படத்தில் அஜித் மாறுபட்ட புது கெட்அப்பில் வரவிருக்கிறாராம். இவருக்கு ஜோடியாக திரிஷா, லட்சுமிராய், வேதிகா ஆகியோர் நடிக்கிறார்கள் என உத்தியோகபூர்வமாக வெங்கட்பிரபு அறிவித்திருக்கிறார்.

எதிர்வரும் 20ஆம் திகதி தொடங்கும் மங்காத்தா படப்பிடிப்புகள் சென்னை, மும்பாய், கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களிலும் சில வெளிநாடுகளிலும் நடைபெறவிருக்கின்றன.


You May Also Like

  Comments - 0

  • nabeel Tuesday, 28 September 2010 11:05 PM

    thala supperle

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X