2025 மே 21, புதன்கிழமை

மன்மதன் அம்பு தயார்..!

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் கமல்ஹாசன் - மாதவன் இணைந்து நடிக்கும் 'மன்மதன் அம்பு' படப்பிடிப்புகள் யாவும் நிறைவடைந்துள்ளதாக நடிகர் மாதவன் குறிப்பிட்டுள்ளார்.

'மன்மதன் அம்பு' படப்பிடிப்புகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாதவனுக்கு பிடித்த உணவுகள் ஏராளமாக இருந்ததால் குஷியாகிய அவர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசியுள்ளார். படப்பிடிப்புகள் முடிந்ததும் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் மாதவன் இம்முறையும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தயாராவதாக மாதவனின் நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.

படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் மன்மதன் அம்பின் பின்னணி வேலைகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளிவரும் சாத்தியம் இருப்பதாகவும் தெரியவருகிறது. எந்திரனின் தொடக்கம் எப்படி அமைகிறதோ அதற்கு பிறகுதான் 'மன்மதன் அம்பு' எப்போது வெளியிடலாம் என்பது பற்றி தீர்மானிப்பது என்றும் முடிவு செய்திருக்கிறாராம் தயாரிப்பாளர் உதயநிதி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X