2025 மே 21, புதன்கிழமை

மலையாளம் 'பறையும்' விக்ரம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சினியுலகுக்குள் வந்து நீண்ட காலமாகியும் அண்மைக்காலமாகத்தான் விக்ரமின் புகழ் உச்சத்தில் இருக்கிறது. அந்த நிலையை அடைவதற்கு நடிகர் விக்ரம் பட்டபாடு கொஞ்சமல்ல. அவரது தீராத உழைப்பிற்கு கிடைத்த நற்பெயர்தான் அது.

இந்நிலையில் 'ராவணன்' படத்தின் பின்னர் விக்ரம் எந்த படத்தில் நடிக்கிறார் என்பது புரியாத புதிராகவே இருந்தது. அதற்கு இப்பொழுதுதான் விடைகிடைத்திருக்கிறது. சந்தோஷ் சிவன் இயக்கும் மலையாள படமான 'உறுமி'யில் விக்ரம் முக்கிய பாத்திரமொன்றில் நடிப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.

ப்ரித்விராஜ் - ஜெனிலியா இணைந்து நடிக்கும் 'உறுமி' படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர். பிரபுதேவா, தபு, வித்யாபாலன் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் பங்களிப்போடு உருவாகும் 'உறுமி' படத்தில் மிகவும் முக்கிய பாத்திரம் விகரமுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

மலையாளம் பறையும் விகரமை விரைவில் நாங்களும் வண்ணத்திரையில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X