2025 மே 21, புதன்கிழமை

சூப்பர் ஸ்டாரை சந்தித்த நயன்தாரா

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பலத்த பாதுகாப்புடன் சென்னையின் பிரபல்ய ஜவுலி கடை விளம்பரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. சன் தொலைக்காட்சிக்கு சொந்தமான கலையகத்தில் இந்த விளம்பரம் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த கலையகத்தில்தான் எந்திரனின் இரண்டு பிரமாண்டமான பாடல்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டன.

எந்திரனில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மற்றும் எந்திரனில் ரஜனிக்கு ஒப்பனை கலைஞராக கடமையாற்றிய பானு ஆகியோர்தான் நயன்தாரா நடிக்கும் விளம்பர படத்திலும் கடமையாற்றுகிறார்கள்.

எந்திரன் திரைப்படத்தின் விளம்பர படப்பிடிப்பு மற்றுமொரு சன் தொலைக்காட்சி கலையகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அதில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தினை நடிகை நயன்தாரா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பாக தனியார் ஜவுலி கடையின் மக்கள் தொடர்பாளர் கிரிஜா ராகவன் கருத்து தெரிவிக்கையில்... 'இந்த விளம்பர படம் மிகவும் முக்கியமானது. தீபாவளிக்கு நாங்கள் அறிமுகப்படுத்தும் சாறி பற்றிய விளம்பரம் இது. எமது விளம்பர தூதராக இருக்கும் நயன்தார இதில் நடிக்கிறார். இந்தியாவில் முதல் தடவையாக சில நவீன தொழில்நுட்பங்களை இந்த விளம்பர ஒளிப்பதிவில் பயன்படுத்தியிருக்கிறோம். இப்படப்பிடிப்பு நடந்த சமயத்தில் சூப்பர் ஸ்டாரினை எதிர்பாராமல் சந்திக்கும் சந்தர்ப்பம் நயன்தாராவுக்கும் எமக்கும் கிடைத்தது மகிழ்ச்சியே...' என குறிப்பிட்டுள்ளார்.

எந்திரன் திரைப்படம் தொடர்பாகவும் தனது சொந்த வாழ்க்கை தொடர்பாகவும் சூப்பர் ஸ்டாருடன் நயன்தாரா கலந்துரையாடியதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை ரஜனியின் அடுத்த படத்திற்கு இப்பொழுதே நயன்தாரா அடித்தளம் போட்டிருக்கிறாரோ தெரியவில்லை...!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X