Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 08 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கமலை எல்லோரும் 'உலக நாயகன்' என்று குறிப்பிடுவார்கள். உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபல்யம் பெற்றவர் கமல். அப்படிப்பட்ட ஜாம்பவானின் மகள், சாதாரண பூனையாக வாழமுடியுமா?
ஹிந்தியில் அறிமுகமாகி இப்பொழுது '7ஆம் அறிவு' படத்தில் சூர்யாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில்தான் கமலின் நெருங்கிய நண்பரான ராஜிவ் குமார் இயக்கும் மலையாள படத்தில் நடிப்பதற்கு ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
கமலினை வைத்து சாணக்கியன் படத்தினை இயக்கியவர்தான் இந்த ராஜிவ் குமார். அன்றிலிருந்து இன்றுவரை கமலின் நெருங்கிய நண்பனாகவே இருந்துவருகிறார். ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியிருக்கும் புதிய மலையாள படத்திற்கு 'தட்ஸமயம் ஒரு பெண்குட்டி' என பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மொழி படங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவரும் ஸ்ருதி, அடுத்து ஹொலிவூட் படங்களில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025