2025 மே 21, புதன்கிழமை

விஜய் ஜோடியாகிறார் இலியானா...

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'கேடி' படத்தில் பார்த்த இலியானா மீண்டும் தமிழுக்கு வருகிறார். அதுவும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் அழைப்பின் பேரில் வருகிறார் என்றால் சும்மாவா?

'எந்திரன்' திரைப்படம் இந்திய திரையுலகின் பல சாதனைகளை முறியடித்து ஓடிவருகின்ற நிலையில், '3 இடியட்ஸ்' ஹிந்தி படத்தின் ரீமேக் பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டார் இயக்குநர் ஷங்கர். '3 இடியட்ஸ்' தமிழ் படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அவருக்கு ஜோடியாக ஆரம்பத்தில் பேசப்பட்டவர் தமன்னா. ஆனால் இப்பொழுது தமன்னாவுக்கு பதிலாக இலியானாவை ஷங்கர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ஹிந்தியில் கரீனா கபூர் நடித்த பாத்திரத்தில்தான் தமிழில் இலியானா நடிக்கவிருக்கிறார். இலியானாவின் தந்தையாக சத்தியராஜ் நடிக்கிறார். '3 இடியட்ஸ்' ஹிந்தியில் பல சாதனைகளை தனதாக்கிக் கொண்டது நினைவிருக்கலாம். இப்பொழுது ஷங்கரின் இயக்கத்தில் வெளிவரும் தமிழ் '3 இடியட்ஸ்' என்னென்ன சாதனைகளை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

'கேடி' படம் இலியானாவுக்கு நல்ல பெயரை வாங்கித்தராததால் தெலுங்குப் பக்கம் ஒதுங்கியிருந்த அவர், தமிழ் பட வாய்ப்புக்களை ஒதுக்கியே வந்தார். இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் அழைப்பினால் முழுமையான 4 மாதங்களை '3 இடியட்ஸ்' படத்திற்காக இலியானா ஒதுக்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • aravind Friday, 03 December 2010 07:17 AM

    i love ileana.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X