2025 மே 21, புதன்கிழமை

கராட்டி வீரராகிறார் ஆர்யா

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆர்யாவின் அடுத்த படம் என்ன என எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியினை வெளியிட்டிருக்கிறார்கள். மிஸ்கினின் இயக்கத்தில் 'முகமூடி' என்னும் படத்தில் ஆர்யா நடிக்கவிருக்கிறார்.

'முகமூடி' படத்தில் ஆர்யா கராட்டி வீரராக நடிக்கிறார். மாஸல் ஆர்ட்ஸில் சிறந்தவராக வரும் ஆர்யா, கொல்லும் இயந்திரமாக 'முகமூடி'யில் நடிக்கவிருக்கிறாராம். இதற்காக பிரபல கராட்டி மாஸ்டர் ஒருவரை வரவழைத்து ஆர்யாவுக்கு கராட்டி கற்றுக்கொடுக்க முடிவுசெய்திருக்கிறார்களாம்.

லிங்குசாமியின் தயாரிப்பில் உருவாகும் 'முகமூடி' திரைப்படத்தின் தயாரிப்பு செலவு 90 கோடி ரூபாய் என அறிவித்திருக்கிறார்கள். அதிநவீன தொழில்நுட்பங்களை புகுத்தி மிகவும் பிரமாண்டமான முறையில் திரைப்படத்தினை இயக்கவிருப்பதாக மிஸ்கின் அறிவித்திருக்கிறார். படப்பிடிப்பு தொடர்பான தகவல்கள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ஆர்யாவின் ஆக்ஷன் கலக்கலை அவரது ரசிகர்கள் வெகுவிரைவில் எதிர்பார்க்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X