2025 மே 21, புதன்கிழமை

வேட்டைக்கு தயாராகிறது 'பகலவன்'

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்த பல படங்கள் விஜய்க்கு கைகொடுக்கவில்லை. அதனால் தன்னுடைய வழமையான பழக்கவழக்கங்களை மாற்றி தரமான படங்கள் எதுவானாலும் தனது கோல்ஷீட்டினை ஒதுக்கிக் கொடுத்து வருகிறார். அதனால் தான் இப்பொழுது விஜயின் கையில் ஏராளமான படங்கள் இருக்கின்றன.

அந்தவகையில்தான் இயக்குநர் சீமானின் 'பகலவன்' படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார் விஜய். இயக்குநர் சீமான் தற்சமயம் சிறையில் இருக்கிறார். அங்கிருந்துகொண்டே 'பகலவன்' திரைப்படத்திற்கான திரைக்கதையினை உருவாக்கி வசனமும் எழுதி முடித்துவிட்டாராம். சீமானின் வழக்கு இம்மாதம் 24ஆம் திகதி நீதிமன்றுக்கு வருகிறது. அவரது வக்கீல்கள் நிச்சயமாக சீமானுக்கு பிணை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். அப்படி அவருக்கு பிணை வழங்கப்பட்டால் வெளியில் வந்தவுடன் 'பகலவன்' படத்தில் வேலைகளை ஆரம்பித்துவிடுவதாக அறிவித்துள்ளார்கள்.

கலைபுலி எஸ்.தானுவின் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகவிருக்கிறது. மிகவும் பிரமாண்டமான முறையில் 'பகலவன்' திரைப்படம் உருவாகவிருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என தயாரிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 'பகலவன்' திரைப்படத்தின் அறிவிப்புகள் எதிர்வரும் 24ஆம் திகதியின் பின்னர் வெளிவருமென நம்பப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X