2025 மே 21, புதன்கிழமை

மங்காத்தாவில் இளையராஜா பாட்டு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 'மங்காத்தா' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இம்மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளன. இயக்குநர் வெங்கட் பிரபுவின் வேண்டுகோளுக்கிணங்க யுவன்சங்கர் ராஜா மிகவும் வேகமாக தனது இசை வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார்.

படப்பிடிப்புக்கு செல்லமுன்னர் பாடல்களை தயார் செய்துவிட வேண்டும் என்பது இயக்குநர் வெங்கட் பிரபுவின் ஆசை. அந்த ஆசையினை நிறைவேற்றவே யுவன்சங்கர் ராஜா இப்பொழுதே பாடல் வேலைகளை தொடங்கிவிட்டார்.

'மங்காத்தா' திரைப்படத்தில் மற்றுமொரு ஹைலைட்டான விசயம் ஒன்று இருக்கிறது. அதுதான் இளையராஜாவும் யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து பாடும் பாடல். தந்தையும் மகனும் இணைந்து பாடுகின்ற இந்த பாடல் 'மங்காத்தா'வில் முக்கிய இடம் வகிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இம்மாதம் 25ஆம் திகதி தொடங்கும் படப்பிடிப்புகளுக்கான வேலைகளில் 'மங்காத்தா' குழுவினர் இறங்கியுள்ளனர். அடுத்த வருடம் அஜித்தின் பிறந்ததினமான மே 1ஆம் திகதி இத்திரைப்படத்தை வெளியிடும் உத்தேசம் இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X