2025 மே 21, புதன்கிழமை

இமேஜ் பாதிப்பதாக சூர்யா கவலை...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

"தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் 'ரத்த சரித்திரம்' இந்திப் பதிப்பினை மட்டும் தமிழகத்தில் வெளியிட வேண்டாம். இமேஜ் பாதிக்கும்" என ராம் கோபால் வர்மாவிடம் சூர்யா கவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதனை தமிழகத்தில் வெளியிடும் திட்டம் இல்லை என அறிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.

விவேக் ஓப்ராய், சத்ருகன் சின்ஹா நடித்துள்ள இந்திப் படம் 'ரக்த சரித்ரா' இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகிறது. ஆனால் இந்தியில் 5 மணித்தியாலங்களுக்கும் மேல் ஓடக்கூடிய 'சரித்திரமாக' இந்தப் படத்தை எடுத்துள்ளாராம் ராம் கோபால் வர்மா. எனவே இந்தப் படத்தை இரு பாகங்களாக வெளியிடவிருக்கிறார்.

முதல் பகுதி அடுத்த மாதமும், அதற்கடுத்த பகுதி இரு மாதங்கள் கடந்த நிலையிலும் வெளியாகும் என்றும் ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார். இந்த முதல் பகுதியில் நடிகர் சூர்யா வெறும் பத்துநிமிடக் காட்சிகளில் மட்டுமே வருகிறாராம்.

அதனால் 'இந்திப் பதிப்பினை மட்டும் தமிழகத்தில் வெளியிட வேண்டாம், இமேஜ் பாதிக்கும்' என சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்தே இந்திப் பதிப்பை தமிழகத்தில் வெளியிடுவதில்லை என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளாராம் ராம் கோபால் வர்மா.

ஆனால் இதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் ஒரே பகுதியாக எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X