2025 மே 21, புதன்கிழமை

தனிமை,அமைதி தேடி பாபா குகையில் ரஜினி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எந்திரனின் இமாலய வெற்றியினால் உலகமே அவர் படத்தைப் பாரத்துக்கொண்டிருக்க தனிமை மற்றும் அமைதி தேடி இமயமலை சென்று அங்குள்ள பாபா குகையில் தியானம் செய்து வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த இரு ஆண்டுகளாக எந்திரன் படத்தில் மிகவும் பிஸியாக இருந்ததன் காரணமாக வருடந்தோறும் மேற்கொள்ளும் இமயமலைப் பயணத்தையும் தள்ளிப் போட்டிருந்தார் சூப்பர் ஸ்டார்.

இப்போது, எந்திரன் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன் வசூலில் புதிய சாதனையும் படைத்துள்ளது. இந்நிலையில், உலகமே அவர் படத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்க,  அவர் தனிமையும் அமைதியும் நிறைந்த இமயமலையில் தனது நெருங்கிய நண்பர்கள் இருவருடன் பாபாவின் குகைக்குச் சென்றுள்ளார்.

மிகவும் ஆபத்தான குகை என்று சொல்லப்படும் அந்த குகைக்குள் அமர்ந்து தியானம் செய்து வருகிறார் சூப்பர் ஸ்டார். அத்துடன் அவர் பாபாவின் ஆசிரமத்திலும் தங்கியிருந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. தனது இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு தீபாவளிக்கு முன் சென்னை திரும்பவுள்ள ரஜினி, அவரது ரசிகர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் மகள் திருமணம் மற்றும் எந்திரன் வெற்றிக்காக சிறப்பு விருந்தளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0

  • Mohamed Tuesday, 19 October 2010 07:26 PM

    இவருதானா அவரு!!!

    Reply : 0       0

    anujan Wednesday, 20 October 2010 09:04 PM

    சூப்பர் ஸ்டார் ..............

    Reply : 0       0

    karan Thursday, 04 November 2010 09:57 PM

    வசதியிருந்தாலும் மனிதன் தான் ஒரு உயிர் உள்ள ஜீவன் என்பதை மறக்கலாமா? மனிதன் இவர் மறக்கவில்லை போல் எனக்கு தெரிகிறது.

    Reply : 0       0

    xlntgson Thursday, 18 November 2010 08:45 PM

    இமயமலை அடிவாரத்து மக்கள் சினிமா பார்ப்பதில்லை, இவரை யாரென்றும் கண்டுகொள்வதில்லை, இவராகவே தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாலும் அவர்கள் அப்படியா என்றுவிட்டு போய்விடுவர்!
    இவர் அந்த காலத்திலேயே தேடிப்பிடித்த இடம்.
    அந்த காலத்தில் இவர் மனோநோயில் பாதிப்படைந்திருந்தார் என்று வதந்திகளும் வந்தன.
    வாழ்க்கையில் வெறுப்புற்றிருந்தார் மனிதர் மீது நம்பிக்கை இழந்திருந்தார் என்று கடைசியில் யாரும் இல்லாத இடம் தேடி இந்த இடத்தை யாரோ பரிந்துரை செய்து கண்டு பிடித்து விட்டார். MGR மூகாம்பிகா கோயிலுக்கு ஏற்பட்ட நிலை தான்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X