2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

'வேட்டை' ஆடுகிறார் ஷமீரா ரெட்டி

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'பையா' வெற்றிப்படத்தினைத் தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி இயக்கும் படம் 'வேட்டை'. தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் உருவாகும் 'வேட்டை' படத்தில் ஆர்யாவும் மாதவனும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது ஏற்கனவே வெளிவந்துவிட்ட தகவல். ஆனால் இப்பொழுது புதிதாக வந்திருக்கும் தகவல்தான் இப்படத்தில் ஷமீரா ரெட்டி நடிக்கிறார் என்பது.

தமிழில் நடிப்பதற்கு தயங்கிய ஷமீராவை இயக்குநர் லிங்குசாமி ஒருவாறு சம்மதிக்க வைத்துவிட்டாராம். 'வேட்டை' படத்தின் கதையை முழுமையாக கேட்டவுடனேயே நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம் ஷமீரா.

இந்தப் படம் தமிழிலும் தெலுங்கிலும் உருவாகுவதால் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் ஷமீரா. காரணம் அவர் ஆந்திரா அழகி என்பதுதான்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் 'வேட்டை' திரைப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக அமையுமென இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .