2025 மே 21, புதன்கிழமை

கமல் எய்யும் 'மன்மதன் அம்பு...'

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சூப்பர் ஸ்டாரின் 'எந்திரன்' திரைப்படத்திற்கு பின்பாக அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற திரைப்படம் கமல் ஹாசனின் 'மன்மதன் அம்பு'. உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் திரைப்படம் 'மன்மதன் அம்பு'. இப்படத்தில் கமலுடன் திரிஷா முதன்முதலாக ஜோடி சேர்கிறார். அத்தோடு கமலுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் மாதவனும் இப்படத்தில் நடிக்கிறார்.

'மன்மதன் அம்பு' திரைப்படத்தின் இசை வெளியீடு எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது. தமிழ் திரையுலகின் முதலாவது வெளிநாட்டு இசைவெளியீடாக 'விண்ணைத்தாண்டி வருவாயா' அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து கோலாலம்பூரில் 'எந்திரன்' இசை வெளியீடு மிகவும் பிரமாண்டமாக அமைந்திருந்தது. அந்த வரிசையில் 'மன்மதன் அம்பு' திரைப்படத்தின் இசை வெளியீடும் சிங்கப்பூரில் பிரமாண்டமாக வெளியிட்டு வைக்க ஏற்பாடாகியிருக்கிறது.

இந்நிலையில் 'மன்மதன் அம்பு' திரைப்படத்தில் திரிஷாவுடன் கமல் இருக்கும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. முதன்முதலாக ஊடகங்களுக்கு இப்பொழுதுதான் இப்புகைப்படங்கள் வெளியிட்டு வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்றும் இளமையாக கமலையும் நடிகை திரிஷாவையும் ரசியுங்கள் இப்போதைக்கு, படம் வெளிவந்ததும் மீதி அழகை ரசிக்கலாம்..!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X