2025 மே 21, புதன்கிழமை

அர்ஜுன் புராணம் பாடும் ஹரிபிரியா

A.P.Mathan   / 2010 நவம்பர் 08 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அர்ஜுனின் படங்கள் பெட்டிக்குள் சுருண்டு கிடக்கின்ற நிலையில் அவரின் புகழை பாடவும் ஒரு ஜென்மம் இருக்கிறது என்றால் அது அதிசயம்தான். 'வல்லக்கோட்டை' என்னும் படத்தில் அர்ஜுனுடன் சேர்ந்து நடித்துவருகிறார் ஹரிபிரியா. அர்ஜுனுடன் ஹரிபிரியா நடிக்கத் தொடங்கியதிலிருந்து அர்ஜுன் புராணம் பாடுவதிலேயே காலத்தை கழிக்கிறார் பிரியா.

அர்ஜுன் நடித்த படங்களில் 'ஜென்டில்மேன்' படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படத்தின் பெயர்போலவே அர்ஜுனும் நிஜமான ஜென்டில்மேன் தான் என்று புகழ்ந்து தள்ளுகிறார் ஹரிபிரியா.

நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நடித்துவருகின்ற தனித்துவமான நடிகர் அர்ஜுன். இருந்தபோதிலும் அண்மைக்காலமாக இவரது படங்களை வாங்குவதற்கு வெளியீட்டாளர்கள் தயக்கம் காட்டியே வருகின்றனர். பல படங்களை நடித்து முடித்துவிட்ட அர்ஜுன், இப்பொழுது 'வல்லக்கோட்டை' படத்தை பெரிதும் நம்பிக்கையுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹரிபிரியாவின் பாராட்டு நடிகர் அர்ஜுனுக்கு புது தெம்பை கொடுத்திருக்கிறதாம்..!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X