Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 20 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைக்காலமாக பிரபுதேவா – நயன்தாரா விவகாரம் நாடுகடந்தும் கொடிகட்டிப் பறக்கிறது. இவ்விவகாரம் குடும்பநல நீதிமன்றம் வரை சென்று எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்டவர் பிரபுதேவாவின் மனைவி ரம்லத்தான்.
பலருடைய பல்லிழிப்புக்கு ஆழகியிருக்கும் பிரபுதேவாவின் குடும்ப வாழ்க்கை முறிவடையும் தறுவாயில் இருப்பதால் ரம்லத் மிகவும் மனமுடைந்து போய்விட்டார். அண்மையில் பிரபுதேவாவும் தனக்கும் ரம்லத்துக்கும் சட்டப்படி திருமணம் நடைபெறவில்லை என்று அறிவித்திருந்தார். சட்டப்படி தாங்கள் வாழ்ந்ததற்கான ரேஸன் கார்ட் மற்றும் பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் போன்றவற்றை ஆதாரமாக நீதிமன்றில் சமர்ப்பித்தார் ரம்லத். ஆனால் அதனையும் போலியென பிரபுதேவா மறுத்துவருகிறார்.
இதனால் மனமுடைந்துபோன ரம்லத், கடந்த வியாழக்கிழமை இரவு அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரையை பாவித்து மயக்கநிலைக்கு சென்ற நிலையில், வேலைக்காரர்களால் காப்பாற்றப்பட்டிருக்கிறார். இவ்விவகாரமும் பொலிஸ் வரை சென்றுவிட்டது. தற்கொலைக்கு முயன்றார் என ரம்லத் மீது பொலிஸ் வழக்கு பதிந்துள்ளது.
தனது தற்கொலைக்கு காரணமானவர்கள் நயன்தாராவும் பிரபுதேவாவும்தான் என ரம்லத் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதால் பொலிஸார் இவர்கள் இருவர்மீதும் வழக்கு தாக்கல் செய்வதற்கும் உத்தேசித்துள்ளதாம். இப்படியே சென்றால் ரம்லத் பைத்தியமாகிவிடுவார் போல இருக்கிறது என அவரது சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025