2025 மே 21, புதன்கிழமை

விஜயகாந்துக்கு வில்லன் தாய்லாந்தில்

A.P.Mathan   / 2010 நவம்பர் 21 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசியலில் தனது கவனத்தை அதிகமாக செலுத்தத் தொடங்கியதால் சினிமாவில் நடிப்பதுபற்றி சிந்திக்க தவறிவிட்ட விஜயகாந்தின் இயக்கத்தில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் 'விருதகிரி'.

பிறருடைய இயக்கத்தில் நடிப்பதால் தனது இமேஜ் பாதிக்கப்படும் என்று நினைத்தாரோ என்னமோ, தானே தனது படத்தை இயக்குவது என முடிவுசெய்து படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் விருதகிரி படத்தின் பாடல்கள் இன்னும் ஒருசில தினங்களில் வெளிவரவிருக்கின்றன.

இப்படத்திலும் வழமைபோலவே துப்பறியும் பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வெளிநாட்டு சண்டைக்காட்சி கலைஞர்களை அதிகமாக பயன்படுத்தி மிகப் பிரமாண்டமான சண்டைக்காட்சிகளை விருதகிரியில் உருவாக்கியிருப்பதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் முக்கியமான வில்லன் தாய்லாந்தின் பிரபலமான வில்லன் நடிகர் என கூறப்படுகிறது.

தனக்கு ஈடுகொடுக்கும் வில்லன் அவர்தான் என விஜயகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். வெகுவிரைவில் 'விருதகிரி' திரைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X