Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 24 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
"காலேஜ் பையன் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்க முடியாது. சிறுத்தையில் எனக்கு ப்ரமோஷன் கிடைத்துள்ளது. அதனால் நான் அதில் நூற்றுக்கணக்கான ரவுடிகளைப் பந்தாடுகிறேன். இதற்காக உண்மையான பொலிஸ், கொள்ளையர்களுடன் பழகினேன்" என்று உற்சாகமாகப் பேசியுள்ளார் நடிகர் கார்த்தி.
அத்துடன் "பவர்புல் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் உற்சாகமாக உள்ளது. பஞ்ச் டயலொக்குகளை முதல் முறையாக இந்த படத்தில் கதைத்துள்;ளேன். அப்படிப் கதைக்கும் போதே, நானும் ஒரு மாஸ் ஹீரோதான் என்பதை உணர்கிறேன். ஆக்ஷன் கதைகளில் இனி அதிக கவனம் செலுத்தப் போகிறேன்" என்றும் கூறியுள்ளார் கார்த்தி.
அந்தவகையில் தன்னுடைய படங்கள் அனைத்துமே மாஸ் ஆக்ஷன் படம்களாக அமைவதால் தானும் ஒரு மாஸ் ஹீரோ என்று மார் தட்டிக்கொள்கின்றார் கார்த்தி.
பருத்தி வீரனில் அறிமுகமான கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன், பையா மற்றும் நான் மகான் அல்ல படங்களுக்குப் பிறகு தமிழில் முக்கிய ஹீரோவாகிவிட்டார். இப்போது சொந்தக்காரர் தயாரிக்கும் சிறுத்தையில் நடிக்கிறார். இந்தப் படத்தில் திருடன், பொலிஸ் என இரு கதாபாத்திரங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த புது விதமான கதாபாத்திரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியள்ளார். என்னமோ போங்க... இதே நினைப்பில் ரசிகர்களை குத்தாமல் இருந்தால் சரி!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025