Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 26 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறுகிய காலத்தில் நிறைய சாதனைகளை படைக்க துடிக்கின்ற நடிகர்களின் பட்டியலில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இடத்தில் நடிகர் விஷால் இருக்கிறார். தன் உடலை வருத்துவதோடு மட்டுமல்லாமல் நடிப்பிலும் புதிதுபுதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆவலில் நடித்துவருபவர் விஷால் என்ற கருத்து கோடம்பாக்கத்தில் பரவலாகவே இருக்கிறது.
விஷாலின் நடிப்புக்கு தீனிபோடுவதற்கு தயாராகிய இயக்குநர் பாலா, ஆர்யாவுடன் சேர்ந்து விஷாலையும் 'அவன் இவன்' படத்திற்காக இயக்கிவருகிறார். இப்படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடிகர் விஷால் நடித்துவருகிறார். இந்த பாத்திரமானது கின்னஸ் புத்தகத்தில் பதியப்படும் என எதிர்வுகூறியிருக்கிறார்கள். படப்பிடிப்புக் குழுவினரின் இக்கூற்றினால் குதூகலமாகியிருக்கும் விஷால், 'அவன் இவன்' படத்தில் வெளியீட்டுக்காக காத்திருக்கிறாராம்.
இயக்குநர் பாலாவிடம் அகப்பட்டுவிடுகின்ற நடிகர்கள் எப்பொழுதும் மிளிர்வது கண்கூடு. ஆகையினால் விஷாலின் நடிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுவதும் சகஜமானதே.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025