Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 28 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமாவில் தனக்கென தனியொரு இடத்தினை தக்கவைத்திருக்கும் நடிகர் என்றால் முதலில் ஞாபகம் வருபவர் கமல்ஹாசன். அந்தளவுக்கு தன்னுடைய நடிப்பினால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கிறார் கமல். சினிமாவில் எத்தனையோ சாதனைகளை படைத்துவிட்ட கமல், விளம்பர படத்தில் நடிப்பதில்லை. விளம்பர படம் என்றாலே ஒதுங்கியிருந்த கமல் இப்பொழுது விளம்பர படங்களில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
எச்.ஐ.வைரஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே கமல் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ''விளம்பர படங்களில் நடிக்கின்ற எத்தனையோ வாய்ப்புக்களை நான் வேண்டாமென தள்ளிவைத்திருக்கிறேன். ஆனால் அதை இப்போது செய்வதற்கு ஆவலாக இருக்கிறேன். இந்த விளம்பர படங்களில் நடிப்பதால் எனக்கு கிடைக்கின்ற பணத்தினை எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செலவிட காத்திருக்கிறேன். இது ஒரு தனிமனிதனாகிய என்னால் செய்யக்கூடிய சிறிய உதவி. அரசாங்கமும் ஒத்துழைத்தால் ஒன்றும் அறியாத இந்த பிஞ்சுகளின் எதிர்காலம் சிறக்கும்..'' என மனமுருகி பேசியிருக்கிறார் கமல்.
இதேவேளை கமலினை புகழ்ந்து தள்ளுவதிலேயே தன்னுடைய பொழுதினை இப்பொழுது போக்கிக் கொள்ளும் நடிகையென பெயரெடுத்திருக்கிறார் திரிஷா. அண்மையில் சிங்கபூரில் நடைபெற்ற 'மன்மதன் அம்பு' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கவிதை படித்ததற்கும் பாடல் பாடியதற்கும் கமல்தான் குருவாக செயற்பட்டார் என்று பெருமிதமடைகிறாராம் திரிஷா.
எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக திகழும் கமலின் புதிய அறிவிப்பும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனதுக்கு ஆறுதலை தந்திருக்கும் இத்தருணத்தில் அவரது முயற்சிகள் வெற்றியடைய ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025