2025 மே 21, புதன்கிழமை

பிரபுதேவா என் அண்ணன் மாதிரி: ஹன்சிகா

A.P.Mathan   / 2010 நவம்பர் 29 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் கசிந்து கல்யாணத்தில் முடிந்துவிடும் தறுவாயில் இருக்கும்போது மீண்டுமொரு குழப்பத்துக்கு முகம்கொடுக்க தயாராகிவிட்டார் பிரபுதேவா.

பிரபுதேவாவின் இயக்கத்தில் 'எங்கேயும் காதல்' படத்தில் நடித்துவரும் ஹன்சிகாவுக்கும் பிரபுதேவாவுக்கும் புதிதாக காதல் பிறந்துள்ளதாக சிசுசிசுக்கள் பரவத் தொடங்கியுள்ளன. ஹோட்டலில் தங்கியிருந்த பிரபுதேவாவையும் ஹன்சிகாவையும் கையும் களவுமாக பிடித்த நயன்தாரா கோபப்பட்டு ஹன்சிகாவின் கன்னத்தில் அறைந்தார் என்ற செய்தியும் அடிபடத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில்தான் 'நான் என்னும் சின்னப்பொண்ணு. இன்னொருத்தரின் கணவனை காதலிக்கும் அளவுக்கு கேவலமானவள் நானில்லை. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி...' என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் ஹன்சிகா. நயன்தாராவை தான் அண்மையில் சந்திக்கவேயில்லை என்றும் மறுத்திருக்கிறார்.

யார்தான் நடந்ததை அப்படியே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக முளைத்திருக்கும் பிரபுதேவா - ஹன்சிகா காதல் விவகாரம் எவ்வளவுதூரம் செல்லுமென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X