Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 டிசெம்பர் 01 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வெயில்', 'அங்காடித்தெரு' போன்ற அற்புதமான திரைப்படங்களை ரசிகர்களுக்காக வழங்கிய இயங்குநர் வசந்தபாலன், தனது புதிய படத்தின் வேலைகள் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளார்.
இரண்டம் உலகமகா யுத்தத்தின்போது சென்னையில் நடைபெற்ற ஓர் உண்மை சம்பவத்தை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் வசந்தபாலன் அப்படத்திற்கு 'அரவன்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தினைப்பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டாலும், பாரிய பொருட்செலவில் தயாரிக்கவிருப்பதால் சற்று தள்ளி வைத்திருந்தார். இப்பொழுது அப்படத்தின் வேலைகளை மும்முரமாக தொடங்கியிருக்கிறார்.
வரலாற்று படமாகிய 'அரவன்'இல் நடிப்பதற்கு நடிகர் பரத்தினை நாடியிருக்கிறார்கள். பரத்தும் கதை பிடித்துவிட்டதால் உடனே நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
விரைவில் இப்படத்தின் தொடக்கவிழா பற்றிய அறிவிப்புகள் வெளிவருமென வசந்தபாலன் தெரிவித்திருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025