A.P.Mathan / 2010 டிசெம்பர் 01 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பலரது எதிர்பார்ப்பினையும் தன்னகத்தே கொண்டிருக்கும் 'மன்மதன் அம்பு' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கமல் ரசிகர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசாக 'மன்மதன் அம்பு' திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இம்மாதம் 17ஆம் திகதி இத்திரைப்படம் திரைக்கு வருமென தயாரிப்பாளர் தரப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.
மிகவும் பிரமாண்டமான முறையில் தயாராகியிருக்கும் 'மன்மதன் அம்பு' திரைப்படத்தின் பாடல் வெளியீடு அண்மையில் கோலாகலமாக சிங்கப்பூரில் நடைபெற்றது. வெளியிடப்பட்ட பாடல்களும் சக்கைபோடு போடுகின்றன. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இத்திரைப்படத்தைப் பொறுத்தமட்டில் கமலின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கிறது.
கதை, திரைக்கதை என ஒருபக்கம் இருக்கையில் பாடல்களை எழுதியும் பாடியும் இருப்பது மற்றொரு சிறப்பானதாகும். தனக்குள் இருக்கும் கவித்திறனை இப்படத்தின்மூலமாக கமல் மறுபடியும் நிரூபித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரமாண்ட கலைஞர்களின் பங்களிப்பும் மன்மதன் அம்பு திரைப்படத்தின் எதிர்பார்ப்புக்கு காரணமாக விளங்குகின்றது.
இப்படி பல பிரமாண்டங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் 'மன்மதன் அம்பு' திரைப்படம் கிறிஸ்மஸ் பரிசாக ரசிகர்களுக்கு கிடைக்கவிருப்பதில் பெரும் மகிழ்ச்சியில் கொந்தளிக்கிறார்கள் கமலின் ரசிகர்கள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

2 hours ago
2 hours ago
3 hours ago
nafaz Monday, 06 December 2010 06:21 AM
பார்க்கலாம்,,,,,,,,,,,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago