2025 மே 21, புதன்கிழமை

மீண்டும் ஒஸ்கார் விருதுக்காக ரஹ்மான்..!

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெயர், புகழ் என அனைத்திலும் உச்சத்தில் இருக்கின்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உலகின் உயரிய விருதுகள் பலதையும் வென்றவர். உலகத்தின் தலைசிறந்த கலைத்துறை விருதாக கருதப்படும் 'ஒஸ்கார்' விருது தொடக்கம் இசையுலகின் ராஜ விருது 'கிரம்மி'வரை அனைத்தையும் வென்றவர் இசைமேதை ஏ.ஆர்.ரஹ்மான்.

கடந்த ஆண்டில் 'சிலம்டோக் மில்லியனர்' படத்தின்மூலமாக உலகின் பார்வையை தன்பக்கம் திரும்ப வைத்த ஏ.ஆர்.ரஹ்மான், இவ்வருடம் '127 மணித்தியாலங்கள்' திரைப்படத்தினூடாக மீண்டும் தன்பக்கம் உலகின் பார்வையை திரும்ப வைத்திருக்கிறார்.

'127 மணித்தியாலங்கள்' திரைப்படத்தின் பாடல்கள் இப்பொழுது உலகின் இசை ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளதால் இம்முறையும் ஒஸ்கார் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கோல்டன் குளோப்' விருதுக்கு ஏற்கனவே இப்படம் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் நிச்சயமாக ஜனவரி 6ஆம் திகதி ஒஸ்கார் விருதுக்கும் இப்படம் பரிந்துரைக்கப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கடந்த முறையில் தொடர்ச்சியாக விருதுகளை வென்று குவித்த இசைமேதை ஏ.ஆர்.ரஹ்மான், இம்முறையும் விருதுகளை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் என அவரது இசை ரசிகர்கள் மகிழ்ச்சி வெளியிடுகிறார்கள். தமிழ்மிரர் சார்பிலும் அவருக்கு முன்கூட்டிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X