Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பையா திரைப்படத்தின் மூலம் தமன்னாவுக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்த லிங்குசாமிக்கு தமன்னா அதிர்ச்சி வைத்தியமொன்றை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. சினிமாவைப் பொறுத்தவரை பணத்துக்குத் தான் முதலிடம். நன்றி என்பது சினிமாவுக்கு ஒத்துவராத வார்த்தை என்பது பல சினிமாக்காரர்களின் பொதுவான கருத்து. அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளதாம் சமீபத்தில்.
இயக்குநர் லிங்குச்சாமியின் படம் பையா. இதில் முதலில் நாயகியாக நடிக்கவிருந்தவர் நயன்தாரா. அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் தருவதாக முதலில் பேசியிருந்தார் லிங்குசாமி. ஆனால் நயன்தாராவின் படங்கள் வரிசையாக தோல்வியைத் தழுவிக் கொண்டதால் அவருக்கான சம்பளத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்தார் லிங்கு. ஆனால் அதை நயன்தாரா ஏற்கவில்லை. இதனால் இருவருக்கும் பிரச்சினை வெடித்தது. இறுதியில் நயன்தாரா பையாவிலிருந்து நீக்கப்பட்டார். தமன்னா அந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
பையா பெரும் வெற்றி பெற்றது, தமன்னாவுக்கும் இதன் மூலம் நல்ல பெயர் கிடைத்தது. இப்போது லிங்குச்சாமி தனது அடுத்த படமான வேட்டையை இயக்கவுள்ளார். இதில் நாயகியாக நடிக்குமாறு தமன்னாவை அணுகினார். பையா வெற்றிப் படத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் குறைந்த சம்பளத்தில் நடித்துத் தருவார் தமன்னா என்பது அவரது எண்ணம். ஆனால் தமன்னா கேட்ட சம்பளத்தைக் கேட்டு அதிர்ந்து விட்டாராம் லிங்கு.
எதிர்பாராத ஒரு பெரும் சம்பளத்தை தமன்னா கேட்கவே அதிர்ச்சியாகி விட்டாராம் லிங்கு. அவ்வளவு சம்பளம் தர முடியாது என்று கூறிய அவர் பிறகுதான் அனகா என்கிற அமலாவை நாயகியாக்கினாராம்.ஏற்றம் கொடுத்தவர்களை ஏறிய பிறகு கண்டு கொள்ளாமல் போவது தமிழ் சினிமாவில் சகஜம்தான் என்று கூறினாலும், லிங்குவுக்கு தமன்னா தந்த அதிர்ச்சிதான் கோலிவூட்டில் இப்போது சூடான பேச்சாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025